அனுராதபுரத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் திருப்பம்!

அனுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் அதிகரித்துள்ளதாகவும் மற்றும் இறப்பு விகிதமும் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளதாக பாலியல் சுகாதார சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒன்பது மாதங்களில் 24 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் பாலியல் சுகாதார சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த வருடமே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

அவர்களில் ஏழு பேர் ஓரினச்சேர்க்கை உறவுகளினால் நோய்க்கு ஆளான ஆண்கள் என கலாநிதி வீரக்கோன் சுட்டிக்காட்டினார்.

பிற செய்திகள்

Leave a Reply