
இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுக்களை நடத்துவதற்கு கல்வி அமைச்சு செயற்பட்டு வருகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
2020, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் , அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் கோவிட் தொற்றுநோய் காரணமாக நடத்த முடியாத நிலை காணப்பட்டன.
,இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் , இந்த ஆண்டு “அனைத்து இலங்கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் 2022” நடத்த கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணர்வதும், போட்டியில் சிறப்பாகச் செயல்படும் விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்வதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
31 குழுப் போட்டிகள் மற்றும் 32 தடகளப் போட்டிகளைக் கொண்ட நான்கு கட்டங்களாக விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அத்துடன் 2022-11-16 முதல் 2022-11-20 வரை மாகாண மட்டத்தில் குழுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 35000 விளையாட்டு வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த அகில இலங்கை பாடசாலை போட்டியின் ஆரம்ப விளையாட்டு நிகழ்வாக நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் தேசிய மட்ட மற்றும் மேல் மாகாண அரைமரதன் போட்டியை ஒக்டோபர் 8 ஆம் திகதி கம்பஹா நகரில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரை மரதன் ஓட்டத்தில் 600 சிறுவர், சிறுமியர்களும், மாரத்தானில் 1200 சிறுவர் சிறுமிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிற செய்திகள்





