வெல்லவாய ஐ.ஓ.சி. நிரப்பு நிலையத்துக்கு சீல் வைப்பு

வெல்லவாய,ஒக் 05

வெல்லவாயவில் உள்ள இந்தியன் ஒயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் முறைகேடுகள் காரணமாக முற்றாக சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) பிற்பகல் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் நிறை அளவீட்டு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட சோதனையின் பின்னர் இந்த சீல் வைக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply