எதிர்வரும் டிசெம்பர் மாதம் நாட்டில் மீண்டும் பாரிய போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கும் சுரேஷ்

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நாட்டில் மீண்டும் பாரிய போராட்டம் வெடிக்கும் என ஈ.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடனை மையமாக வைத்து அடுத்து வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிகிறது.ஆனாலும் ஐ.எம்.எப் உடன் யார் கதைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.அரசு கதைக்கிறதா யார் கதைக்கிறார் என்று தெரியவில்லை.

இவ்வாறான ஒரு நிலையில் நாடு மிக மோசமாக சென்றுகொண்டு இருக்கிறது.அடுத்த நவம்பர், டிசம்பர் மாத அளவில் நாட்டில் பட்டினி பஞ்சம் ஏற்படும்.இதை ஆளும் கட்சி உறுப்பினர்களே தெரிவிக்கின்றனர்.இதனால் இன்னும் பாரிய அளவில் போராட்டம் வெடிக்கவுள்ளது.

இந்த நிலையில் ரணிலை வைத்து ராஜபக்ச குடும்பம் காய் நகர்த்துகிறது.ஆகவே அவர்களை நாம் நம்புவது எங்களை நாமே ஏமாற்றுவது போன்றது.எதைக் கேட்டாலும் பணம் இல்லை டொலர் இல்லை.அதை விட பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் போன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ஆகவே மக்கள் வேண்டிய மாற்றம் வரவேண்டும்.அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்,என்ன திட்டம் உள்ளது என்று கூறவேண்டும்.அப்போது தான் சரியான அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்படும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply