யாழ். மறைமாவட்டத்தில் முதலாவது கத்தோலிக்க முதியோர் சங்கம் இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி அ.ஜொ.யாவிஸ் அடிகளார் தலைமையில் அங்குரார்ப்பணம் இன்று செய்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக யாழ் மறைமாவட்டத்தின் மிக மூத்த குருவும், மறைமாவட்ட முன்னைநாள் குருமுதல்வருமாகிய அருட்கலாநிதி S.J. இம்மானுவேல் அடிகளாரும் கலந்துகொண்டார்.
பங்கின் மூத்த குரு மைந்தனும், அமல மரி தியாகிகள் சபைக் குருவுமாகிய அருட்பணி அல்பன் இராஜசிங்கம் அமதி அடிகளாரும், மகிழ்வூட்டும் வளவாளராக திருவாளர் ஜெகன் அவர்களும் பங்கின் உதவிப் பங்குத்தத்தை அருட்பணி தீபன் அடிகளார் இவ் முதியோர் சங்க ஒன்று கூடலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் பங்கின் மறை உதவியாளர் அருட்பணி யூட்தாஸ் அடிகளாரும், 45ற்கு மேற்பட்ட முதியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஆயத்தம் செய்த இளையோர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
முதுமை இறைவனின் அதியுன்னத கொடை அதனை மகிழ்வுடன் களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையரின் ஆலோசனைகளுடன் இந்த பங்கின் இளையோர் மன்றத்தினர் மேற்கொண்டிருந்தனர்.









