தயாசிறியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்றைய தினம் (05) தெரிவித்த கருத்து பொய்யானதும் அடிப்படை ஆதாரமற்றது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே வெளியிடப்பட்ட அறிக்கை எனவும், இந்த அறிக்கையை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் வன்மையாக நிராகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரென்ட் எரிபொருளை இறக்குமதி செய்வதில் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் பாரிய ஊழல்களை செய்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்வதில் டெண்டர் முறை மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் செயல்முறையை எப்போதும் அங்கீகரிப்பதாகவும், அது தொடர்பான எந்தவொரு சட்ட விவகாரத்திலும் விசாரணைகளை ஆதரிக்க முடியும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply