ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி அவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply