மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சட்டத்தரணி திரு.ஸ்ரீதர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவரை விமான நிலையத்தில் ,இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன்,ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன், லயன் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சட்டத்தரணி திரு.ஸ்ரீதர்:
நான் இங்கே வருகை தந்தமைக்கு பல காரணங்கள் உண்டு.அதில் முதன்மையானது அகதிகளை அவர்களின் சொந்த இடங்களுக்கு குடியேற்றுவது.
பன்னாட்டு லயன்ஸ் கழகங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.குறிப்பாக உக்கிரைனில் உள்ள அகதிகள் தொடர்பில் இவ்வாறான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆகவே தான் இந்தியாவில் உள்ள இலங்கை மக்களுக்கு இவ்வாறு ஒரு நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது என்று நாம் சிந்தித்தோம்.
இது தொடர்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அக்கறையுடன் திட்டங்களை வகுத்துள்ளார்.ஆகவே இலங்கை அரசு இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.இதற்கான சாதமான வழிகள் என்ன.அகதிகளை மீள இங்கு அழைத்து வரும்போது அவர்களுக்கான விசாக்கள்,தொழில் வாய்ய்புக்களை உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்வதற்கு இங்கு வந்துள்ளேன்.
இது தவிர வன்னிப் பிரதேசத்தில் நூலகம் ஒன்றை அமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளது.இதற்கான வேண்டுகோள் ஒன்றை நாடளுமன்ற உறுப்பினர் திலீபன் மேற்கொண்டார்.ஆகவே இவ்வாறு பல பணிகளை இங்கே ஆராய்வதற்கு வருகை தந்துள்ளேன் என்றார்.
பிற செய்திகள்





