60 வயதுடைய காதலியை கத்தியால் குத்தி, தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இருவரும் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் அவர்கள் பேஸ்புக் மூலம் டேட்டிங் செய்து காதல் உறவை ஏற்படுத்தியுள்ளனர்.
60 வயதுடைய காதலியின் மகள்கள் தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும், காதலி தனியாக வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் காதலன் தனது காதலியை சந்திப்பதற்காக மீகொடைக்கு சென்று ஓரிரு இரவுகள் தங்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒரு நாள் காதலியின் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது, காதலன் படுக்கையில் இருந்த காதலியை சரமாரியாக வெட்டிவிட்டு தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தில் படுகாயமடைந்த காதலி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






