கொழும்பு,ஒக் 06
ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை 13 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதரவாக 07 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 20 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகி செயற்பட்டுள்ளன.
வாக்கெடுப்பில், சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அத்துடன், ஜப்பான் வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து செயற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த பிரேரரண முன்வைக்கப்பட்டிருந்தது
பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த ரேரணையை வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையை சுட்டிக்காட்டியுள்ளது.





