
தேர்தல் சட்டத்தை மீறி பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் ஆட்களை ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் அவரும் ஏனையோரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சீல நீர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை வாக்களிக்க அழைத்துச் சென்றிருந்தன இந்நிலையில் 95 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





