தயாசிறிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு, ஒக் 06

மசகு எண்ணெய் இறக்குமதியின் போது மோசடி இடம்பெற்றிருக்க கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதியின் போது சகல சந்தர்ப்பங்களிலும் அரச அனுமதிக்கு உட்பட்ட செயற்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தி குறைந்த விலைகளுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு விசாரணைகளுக்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கும் தகவல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply