
இலங்கை மக்களின் கடும் வெறுப்புக்கும், சாபத்துக்கும் உரியவராக பஷில் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டுக்குள் பாராளுமன்றம் சென்று விட்டது . கோப் குழுவின் தலைமைத்துவம் பஷில் ராஜபக்ஸவின் விசுவாசியிடம் சென்றுவிட்டதால் கோப் குழுவின் செயற்பாடுகள் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார் .
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை , ஜனாதிபதி ஒரு வழி , பிரதமர் இன்னொரு வழி என்பதால் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை .
இலங்கை மக்களின் கடும் வெறுப்புக்கும் , சாபத்துக்கும் உரியவராக பஷில் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டுக்குள் பாராளுமன்றம் சென்றுவிட்டது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலை மைத்துவம் பஷில் ராஜபக்ஸவின் விசுவாசியிடம் சென்றுவிட்டதால் கோப் குழுவின் செயற்பாடுகள் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது என்றார்.
பிற செய்திகள்





