
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இனந்தெரியாத நபர்களின் கல்வீச்சுக்கு இலக்கான பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த போதிலும் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது .
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .
பிற செய்திகள்





