
எமது வருடாந்த நிகழ்வான வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கை என்னும் செயற்திட்டத்தினை தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மேற்கொண்டு வருகிறோம் என தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தவகையில் யாழ்.இந்துக்கல்லூரி அதிபர் தலைமையில் நாங்கள் இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள்,விதைகள் வழங்கல் நிகழ்வோடு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வையும் செய்திருந்தோம்.
தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கும் மாணவ சமூகம் ,பசுமை நேயத்துடன் ஒட்டி வளர்க்கும் போது இந்த போதைப்பொருள் பாவனை தொடர்பான விடயங்களில் இருந்து விடுபடக்கூடிய வகையில் செயற்படும் என்ற அடிப்படையில் ” உயிர் கொள்ளும் போதைவஸ்துவை ஒழிப்போம் ” எனும் இந் நிகழ்வினை நடாத்தி முடித்திருக்கின்றோம் என்றார்.
பிற செய்திகள்





