போதைப்பொருள் வியாபாரம் கொக்குவிலில் பெண் கைது

உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கொக்குவில் பகுதியில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த பெண் கைதாகியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply