
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெறவுள்ள ”திறன்காண் நிகழ்ச்சி ” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் முகுந்தன், கிரோசின் ஆகியோரும் நிறைவேற்று பணிப்பாளர் Dr. விஜிதா பகிரதன் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு குறித்த நிகழ்வு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது;
முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக ” திறன்காண் நிகழ்ச்சி 2022 ” ( Rising Stars Talent Show – 2022 ) எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வானது ஐப்பசி மாதம் 15 ம் மற்றும் 16 ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தினுள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இந் நிகழ்வின் பிரதான நோக்கமானது வடமாகாணத்தில் உள்ள இளைஞர்களின் மத்தியில் உள்ள தொழில்நுட்ப திறன்களை இனங்கண்டு அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்வதாகும் .
அந்த வகையில் வடமாகாண கல்வித்துறையின் மேம்பாட்டில் பிரதான பங்குதாரர்களாக விளங்கும் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரியானது கடந்த 07 ஆண்டுகளாக வடமாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களை சேர்ந்த மாணவர்கள் பலரிற்கு தொழில்சார் கற்கை நெறிகளை இலவசமாக வழங்கி வருகின்றது .
அத்துடன் இக் கற்கைநெறிகள் சமகால தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதில் பெரும் பங்களிப்பு செய்வதோடு , பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர் கல்வியினைத்தொடர இயலாத மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகின்றது .
இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு போதாது உள்ளது எனவே இதனை பற்றி மாணவர்களுக்கு ,மாணவர்களின் பெற்றோர்கள் ,மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வொரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது.
அந்த வகையில் இக் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வானது . இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பன்முகத்திறன்காண் போட்டிகளான , மணப்பெண் அலங்காரம் மற்றும் உயர் நாகரிக அலங்காரப் போட்டிகள் , பானங்களில் பல வர்ணங்களை வெளிப்படுத்தும் Mocktail போட்டி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
அதற்கு இணையாக உள்ள 50 க்கு மேற்பட்ட உயர் , நடுத்தர மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் காட்சியறைகளும் , பார்வையாளர்களின் நலன்கருதி அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் குறிப்பாக கண் , காது , உடல் நிறைச்சுட்டி , குருதி அமுக்கம் மற்றும் சர்க்கரை பரிசோதனை என்பவற்றினை இலவசமாக செய்து கொள்வதற்கான இலவச மருத்துவ முகாமும் இந்நிகழ்வின் பிரதானமான அங்கங்களாக உள்ளன . கல்வி மான்கள்,புத்தியீவிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.என்றனர்.
பிற செய்திகள்





