
யாழ்.கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது





