
கொழும்பில் இருந்து வந்திருக்கின்ற விசேட குழு ஒன்று எந்தவிதமான முன்னறிவிப்புக்களும் இன்றி குருந்தூர் மலையின் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றதனை அடுத்து உடனடியாக இங்கு திரண்டு வந்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
குறுந்தூர் மலைக்கு இன்றையதினம் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் வந்ததன் பிற்பாடு அதற்கான ஆயத்தங்கள் கைவிடப்பட்டதாக உணருகின்றோம். ஆனால் வந்த குழுவினர் இந்த நிமிடம் வரை முல்லைத்தீவிலே முகாம் இட்டு இருப்பதாக எங்களுக்கு நம்பகத்தனமான தகவல்கள் கிடைக்க பெற்றுக்கொண்டிருக்கின்றன.
தமிழர் தாயகத்திலே சிங்கள பேரினவாதம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.எந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களுடைய முயற்சியையும்,எதிர்ப்பையும் காட்டுவதன் மூலமே எங்களுடைய தாயகத்தை பாதுகாக்க முடியும் .அந்த வரலாற்று கடமையினை செய்துகொண்டிருப்போம்.என்றார்.
பிற செய்திகள்





