காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் 7பேரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்





