
பருத்தித்துறை இ.போ.ச.சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று நேற்றுமுன்தினம் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் , பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று ஊழியர்களின் இன்னொரு தரப்பு நேற்று அறிவித்துள்ளது .
கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 12 ஆம் திகதி பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தொழிற்சங்கம் ஒன்று நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது.
எனினும் , இதுதொடர்பில் பருத்தித்துறை சாலையைச் சேர்ந்த வேறு சில தொழிற் சங்கங்கள் நேற்று அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் , இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் , மக்களுக்கான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளன.
பிற செய்திகள்





