யாழில் ஹெரோய்ன் வியாபாரிகளுக்கு வலைவீச்சு-அறுவர் கைது!

உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரிகள் மீதான வேட்டை தொடர்கிறது. இவ்வாறான நிலையில் ஒரு வாரத்தில் மாத்திரம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொக்குவில் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவருடன் சேர்த்து இந்த வாரத்தில் 6 வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் . கொக்குவிலில் நேற்றுக் கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .

கொக்குவில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரி என்று சந்தேகத்தில் கைது செய் யப்பட்ட பெண்ணின் உறவினரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply