
சுயாதீனமாகச் செயற்பட முடியாமற் போனால் ‘ கோபா ‘ குழுவின் தலைமைப்பதவியை துறப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் , கோபா ‘ குழுவின் தலைவருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார் .
அவர் மேலும் தெரிவித்ததாவது :
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் , கோபா குழுவுக்கு நான் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தேன் .
எனினும் , கோப் குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எம்மால் திருப்தி கொள்ளமுடியாது . அந்தப்பதவிக்கு எரான் விக்கிரமரத்னவை நியமிக்க எதிரணிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது .
கோப் குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரஞ்சித் பண்டார திறமையானவர் என்ற போதிலும் கொள்கை ரீதியலான முரண்பாடு உள்ளது . அவரின் பெயரை மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்து அதனை ரோஹித அபேகுணவர்த்தன வழி மொழிந்தார் .
ஆளுங்கட்சி சார்பிலேயே இந்தத்தேர்வு இடம்பெற்றுள்ளது .
எனவே , இந்தக்குழு ஊடாக அரச நிறுவனங்கள் தொடர்பில் எவ்வாறு விசாரணை நடத்துவது ? எனவே , ‘ கோபா ‘ குழுவின் தலைவராகச் செயற்படுவது பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது . சுயாதீனமாகச் செயற்பட முடியாவிட்டால் முடிவொன்றை எடுப்பேன் – என்றார் .
பிற செய்திகள்





