
கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு வசதியாக புகையிரத திணைக்களம் இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் விசேட அதிவேக புகையிரத சேவையை முன்னெடுக்கவுள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் அநுராதபுரத்திற்குப் புறப்படும் புகையிரதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்கிருந்து கோட்டைக்குத் திரும்பும்.
இந்த புகையிரத்தில் 480 இருக்கைகள் கொண்ட முதல் 10 வகுப்புக்கள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டுள்ளது.
ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 2,500 ரூபாவென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்





