
ஒரு சிறிய குழுவினர் சிறிய அறைகளுக்குள் தங்களை அடைத்துக்கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களைச் சந்தித்து அவர்களின் துயரங்களையும் தவறான பொருளாதார முடிவுகளினால் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார மூலோபாயத்தை அரசாங்கம் செயற்படுத்துவதற்கு அவர் முன்மொழிந்தார்.
பல்வேறு ஊழல்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அரசு மீட்டு, அந்த பணத்தை வரி வருவாயை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான திட்டம் மற்றும் ஐ.நா.வின் திருடப்பட்ட சொத்து மீட்பு உதவித் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நிதியை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கும் அவர் முன்மொழிந்துள்ளார்.
பிற செய்திகள்





