யாழ், ஓக.08
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாளுக்கு நாள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் திருட்டு சம்பவங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் இன்று காலை இணுவில் பிரதேசத்தில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மானிப்பாய்,கோப்பாய் ,சுன்னாகம் போன்ற பல பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.இவரிடமிருந்து 10 எரிவாயு சிலிண்டர்களும்,3 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ,குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது இவர் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கோப்பாய் பிரிவினைச் சேர்ந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.





