<!–
யாழ். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






