
வெளிநாடு தொழிலுக்காக சென்றுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 30,000இற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா தெரிவித்துள்ளார்.
அதில் பெரும்பலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





