12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை!

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் 100 மில்லி மீட்டர் மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு 12 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply