
அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கும் வகையில், மத வழிபாட்டுத் தலங்களை அறநிலைய நிறுவனங்களின் பிரிவில் இருந்து நீக்கி பொது நோக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 65 ரூபாவாக உள்ள மின்சார அலகு ஒன்றின் விலை 32 ரூபாவாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மத ஸ்தலங்களில் நிலவும் மின் கட்டணப் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று காலை மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
பிற செய்திகள்





