மினுவாங்கொடை துப்பாக்கி பிரயோகம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

மினுவாங்கொடையில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

சம்பவத்தில், 51 வயதான தந்தை, 24 மற்றும் 23 வயதான அவரது இரண்டு மகன்களுமே உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்தது.

மகிழூந்து மற்றும் உந்துருளியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டிருந்தது.

உயிரிழந்த மூவரும், கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியிலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலம் நிலவி வந்த முரண்பாடு காரணமாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறை சந்தேகம் வெளியிட்டிருந்தது.

பிற செய்திகள்

Leave a Reply