மீனவர்களுக்கும், மின்சார வசதியற்ற மக்களுக்கும் நிவாரணம்!

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமை காரணமாக கடற்றொழிலாளர்கள் உட்பட மலையகத்தின் பெரும்பாலான மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

அதாவது, குறிப்பாக மண்ணெண்ணெய்யின் விலை அதிகரிப்பால் மின்சார வசதியற்ற மலையக மக்களும், மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், அவர்களுக்கான நிவாரணத்தை திறைசேறியின் ஊடாக வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் முன்வைத்த வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த பதில் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply