உத்தரா தேவி தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு,ஒக் 08

உத்தரா தேவி தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தடை செய்யப்பட்டன.

உத்தரா தேவி அதிவிரைவு கடுகதி ரயில் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரிலே நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை இடையே உத்தரா தேவி ரயில் சேவையில் ஈடுபட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதால், வடக்குப் பாதையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply