தெங்கு செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ வண்டை ஒழிக்க விஷேட நடவடிக்கை!

தெங்கு செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை ஈ எனப்படும் ஒரு வகையான வண்டை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, அது தொடர்பிலான அறிவிப்புக்களை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் 1928 என்ற துரித இலக்கத்திற்கு வழங்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 070 400 1928 என்ற வட்அப் இலக்கம் ஊடாக தெங்கு செய்கை சார்ந்த நோய் மற்றும் பாதிப்பு தொடர்பிலான புகைப்படங்களை அனுப்ப முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, குருநாகல், கேகாலை, புத்தளம், இரத்தினபுரி, கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளை ஈ நோய் தெங்கு செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply