கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளர் சட்டத்தரணி லயன் எம். சிறீதர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் காலை வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக வலி. மேற்கு தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
அவர்கள் தமது எதிர்கால நலன் கருதியும், இலங்கை பிரச்சினையிலும் மிகவும் அக்கறையாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை மக்களுக்கு இந்தியாவில் பிரஜாவுரிமை கிடைக்கவேண்டும், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அண்மையிலே அவர் நீதிமன்றத்திலே வழக்கினைத் தொடர்ந்து, அந்த வழக்கின் மூலம் தமக்கு சாதகமான தீர்வு கிடைத்திருக்கிறதாக தெரிவித்தார்.
அந்த தீர்வின் ஊடாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தியாவின் கடவுச் சீட்டுக்களை பெற்று வெளிநாடுகளுக்கு போய்வரக்கூடிய வாய்ப்புகள் இனி கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நாங்களும், எங்களுடைய இலங்கை பிரச்சனை தொடர்பாக நீங்கள் கூடிய கரிசினை காட்ட வேண்டும் நீண்ட காலம் நாங்கள் தொடர்ந்து இப்படி வாழமுடியாது. எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான செயற்பாடுகளை முழுமையாக உங்களது கட்சியும், உங்களது தலைவர் கமல்ஹாசனும் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம் – என்றார்.


பிற செய்திகள்





