மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பௌர்ணமி தினத்தன்று ஆலயங்களில் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கவுள்ள பிக்குகளின் தீர்மானத்திற்கு ஆதரவாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், தேவாலயங்களிலும் விளக்குகளை அணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இன்று கோவில்களில் விளக்குகள் அணைக்கப்படும்.

கொழும்பில் உள்ள பேராயர் மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் மின் கட்டணங்கள் மத நிறுவனங்களையும் பொதுமக்களையும் பாதித்துள்ளது. இதனால் இந்த அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்





