உப பொலிஸ் பரிசோதகரின் உயிரைப் பறித்த விபத்து

பேருவளை,ஒக் 09

பேருவளை-மொரகல்ல சுற்றுலாப் பொலிஸாருக்கு முன்பாக இன்று அதிகாலை (09) மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பேருவளை பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட, உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க கஸ்தூரியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மோட்டார் சைக்கிளில் கான்ஸ்டபிளுடன் வந்து கொண்டிருந்த போது, ​​எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நால்வர் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply