மீலாத் நபி தினத்தையொட்டி அண்ணதானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

<!–

மீலாத் நபி தினத்தையொட்டி அண்ணதானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு – Athavan News

நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த மீலாத் தினத்தையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு காத்தான்குடி மன்பஉல் ஹைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் வைபவம் மற்றும் அண்ணதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிறுவனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி ஆரம்பித்து வைத்தார்.

இதில் உலமாக்கள் ,பள்ளிவாயலின் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply