உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டி பகுதியிலுள்ள பண்ட் வீதியை விட்டு உழவு இயந்திரமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சம்பூர் – கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிபால கஜன் (வயது – 32) உயிரிழந்துள்ளார்.

வயல் உழவு வேலை செய்வதற்காக சாரதியும், உதவியாளரும் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது உழவு இயந்திரமானது பண்ட் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததிலே இவ் அனர்த்தம் சம்பவத்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த மற்றையர் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த இடத்திற்கு சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வருகை தந்து பார்வையிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply