
கொழும்பு, ஒக் 09
கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங்கை(Bungee Jumping) தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, தாமரைக் கோபுரத்திலிருந்து பங்கி ஜம்பிங் 2023 ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்படும்.
350 மீற்றர் உயரத்தில் இருந்து பாய்தல் நடத்தப்படும் என்பதுடன் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பாய்தல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், தாமரைக் கோபுரம் ஒளியூட்டப்பட்டவுடன், இரவு நேரத்தில் 30-40 பாய்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது





