திருகோணமலை – தோப்பூர் நூரிய்யா அறபுக் கல்லூரியின் மீலாத் நபி விழா கொண்டாட்டம் மிக விமர்சையாக இன்று (09 ) கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ஷெய்ஹ் றபீக் முஹம்மத் றுவைஸ் (புர்க்கானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கவிதை, ஹஸீதா, துஆ பிரார்த்தனை, சிறப்புரைகள் என்பன இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை தோப்பூர் கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஜுனைட் முஹம்மத் சர்ஜீல்(நத்வி) கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் அறபுக் கல்லூரி உயர் சபை உறுப்பினர்கள்,உள்ளுர் பிரமுகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிற செய்திகள்





