யாழ். மாநகர சபை தொடர்பில் பரப்பட்டுவரும் தவறான செய்திகள்! – முதல்வர் விளக்கம்

யாழ். மாநகர சபையின் கடந்த மாத கூட்டம் தொடர்பாக சில தவறான செய்திகள் ஊடகங்களிலே பரப்பட்டு வருகின்றன என யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

செப்டம்பர் 27 ஆம் திகதி கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினைத் தவிர பங்குபற்றிய அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இதற்கு சொன்ன காரணம் என்னவெனில் யாழ்.மாநகர ஆணையாளரால், மாநகர சபைக்குத் தெரியாமல் யப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட இருந்த 4 குப்பை அகற்றுகின்ற வாகனங்களை தருவதற்கான செயற்திட்டத்தினை இரத்து செய்வதற்காக இணங்குவதாக அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலே கருத்துக்களை முன்வைத்து வைத்திருந்தனர்.

அதாவது மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் சபைக்குத் தெரிவிக்கவில்லை என்ற விடயத்தை எழுப்பி நாங்கள் மன்னிப்பு கூற வேண்டும் என கூறியிருந்தார்கள்.

இந்த யாப்பான் வாகனம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளவிலே இருந்த முன்னைய முதல்வரால் கொண்டுவர முடியாமல் போனது. அதன்பின்னர் நான் முதல்வராக பொறுப்பேற்ற பொழுது பல்வேறு தரப்பினரனை சந்தித்து, பல்வேறு கடிதங்களையும் அனுப்பி யாழ். மாநகரசபைக்கு இந்த 4 வாகனங்களை கொண்டு வருவதற்கான பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அதேபோன்று யப்பான் அரசாங்கமும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அது பயன் அளிக்கவில்லை.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி என்னால் ஒரு கடிதம் வழங்கப்பட்டிருந்தது, அதாவது 2022 ஏப்ரல் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 16 ஆம் திகதி வரை பிரதி முதல்வரை பதில் கடைமை ஆற்றும்படி கூறியிருந்தேன்.

ஆகவே இந்த காலாப்பகுதியில் என்னுடைய கடைமைகளை பதில் முதல்வராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி முதல்வர் ஈசன் மேற்கொண்டிருந்தார். நான் கடைமையை இல்லாத சமயம் ஆணையாளரால் யப்பானுக்கு கடிதம் எழுதப்பப்பட்டிருந்தது.

எனவே அக்கால பகுதியில் நான் கடமையில் இல்லை, எனவே நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது என்று எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டதனை பிரதி முதல்வர் எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுடைய கட்சியைச் சேர்ந்த பிரதி முதல்வரிடமே கேட்க வேண்டும்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பொறுத்த வரையிலே இவ்வாறான விடயம் ஒன்று இருக்கிறது, அது அமைச்சரவையிலே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று யப்பான் எம்.ஏ.சி இனாலும் நிதியமைச்சினுடைய மற்றும் உள்ளுராட்சி அமைச்சினுடைய செயலாளர்களாலும் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட அடிப்படையில் மாநகரசபை ஆணையாளர் நேரடியாக ஒரு கடிதத்தினை அமைச்சகருக்கு, அமைச்சரவையில் விவாதியுங்கள் என கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. அணியாளரிடம் இது குறித்து வினாவிய பொழுது தான் அலுவலகத்தில நேரடியாக கையளித்ததாக கூறியிருந்தார். இந்த உண்மைத் தன்மைகளை பற்றி எனக்கு தெரியாது. இதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது என்பது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பது தெரியாது.

ஆனால் சபையிலே அரசியல் நோக்கத்திற்காகவும் அத்துடன் என்னில் பழி போடுவதற்காகவும் கடந்த கூட்டத்தில் புறக்கணிப்பதாக சொல்லி வெளியேறினார்கள். மக்கள் என் மீது தவறான அபிப்பிராயம் கொள்ளட்டும் என்று செய்திருக்கலாம்.

ஆகவே தங்களுடைய பழிகளையும், தவறுகளையும் எங்கள் மீது சுமத்தி அரசியலுக்காக தான் இவ்வாறான செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்று மக்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாத கூட்டத்தில் மக்களுக்கு சேர வேண்டிய பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் அதில் இருந்தன. எவற்றையும் அங்கீகரிக்காமல் கையெழுத்து இட்டு சென்று விட்டார்கள்.

30.06.2020 ஆண்டு முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் இருந்த பொழுது திறைசேரிக்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்கள். இது இன்றுவரை எமக்கு தெரியாது. யப்பானால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாவையும் திறைசேரி பெற்றுக்கொள்ளுங்கள் என்ற கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது குறித்தும் சபைக்கு ஒன்றும் தெரியப்படுத்தப்படவில்லை. இதனை செய்யாமல் என் மீது அவதூறு பரப்பி தமிழ் மக்களுடைய தலையில் மண் அள்ளி கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையினை இழந்து விட்டது. தற்போது நாடு பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டி கட்டத்திலே இருக்கின்றது. மக்கள் பேரெழுச்சியாக திரண்டு இந்த பாரளுமன்றத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வீடு செல்லுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதனை சட்ட ரீதியாக தவிர்த்து, சட்டங்களை சார்பாக பயன்படுத்தி இந்த பாராளுமன்றம் தொடர்கிறது.

இந்த 225 பாராளுமனர் உறுப்பினர்களும் உடனடியாக வெளியேறி புதிய மக்கள் ஆணை ஒன்றை கோருவது தான் மக்களின் விருப்பமான விடயமாக உள்ளது. இதனை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று இருக்கக்கூடிய 75 சதவீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் கடந்த காலங்களில் இந்த நாட்டினை இவர்களுடைய உறவினர்கள், பெற்ரோர்கள் என அரசியலில் இருந்து ஏதோ ஒரு வகையில் மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறார்கள். நாடு இன்று இருக்கும் அவலத்திற்கு இவர்களும், இவர்களின் முன்னவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

இந்த இனவாத, பழைமைவாத சிந்தனைகள் கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் இனி வரும் காலங்களில் மக்களால் விரட்டி அடிக்கப்பட வேண்டும். உடனடியாக பாராளுமன்றத்தினை களைத்து புதிய தேர்தலினை நடத்த வேண்டும் என்பதே வேண்டுகோள்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply