பேருந்துகள் தரிப்பிடத்தில் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளமை தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-பயணிகள் வேண்டுகோள்!

பயணிகள் மற்றும் பாதசாரிகள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சாமிமலை நகரில் உள்ள பிரதான பேருந்துகள் தரிப்பிடத்தில் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளது.
அத்துடன் மழை பெய்யும் பட்சத்தில் அக் குழிகளில் கழிவு நீர் தேங்கி நிற்கும் நிலையில் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறான குழிகள் பல காலங்களாக உள்ளது.இதனை மஸ்கெலிய பிரதேச சபையோ வீதி அபிவிருத்தி அதிகார சபையோ கண்டும் காணாதவாறு உள்ளனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply