செயலற்றுபோன 35 வர்த்தக உடன்படிக்கைகளுக்கு புத்துயிரளிக்க நடவடிக்கை!

பல்வேறு நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தற்போது செயலிழந்துள்ள சுமார் 35 வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக மீள அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச வர்த்தக அலுவலகம், நிதியமைச்சு, மத்திய வங்கி, வர்த்தக அமைச்சின் வர்த்தக திணைக்களம், வெளிவிவகார அமைச்சு என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சின் செயலாளர், எஸ்.டி. கொடிகார குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு காரணங்களால் சில வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பான பல கலந்துரையாடல்கள் முறிவடைந்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே உள்ள வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக செயலாளர் கொடிகார குறிப்பிட்டார்.

இதன் கீழ், சிங்கப்பூருடனான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடன் கைச்சாத்திட்ட வர்த்தக ஒப்பந்தங்கள், தற்போது செயல்படாமல் உள்ள நிலையில், விரைவில் அவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தோனேசியாவுடன் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply