வரலாற்று சிறப்பு மிக்க சங்கு, சக்கர வல்லிபுர ஆழ்வார் ஆலய கண்டாகி சமுத்திர தீர்த்தத் திருவிழா இன்று மாலை!

வரலாற்று சிறப்பு மிக்க சங்கு, சக்கர வல்லிபுர ஆழ்வார் ஆலய கண்டாகி சமுத்திர தீர்த்தத் திருவிழா இன்று மாலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து16 நாள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று நாளை காலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹாற்சவம் நிறைவடையும்.

சங்கு, சக்கர ஆழ்வார், விநாயகர், பூமாதேவி,  ஸ்ரீதேவி, சண்டேஷ்வார் ஆகிய தெய்வங்கள், பாம்பு வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கண்டாகி சமுத்திரத் திருவிழாவின் போது பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து வல்லிபுர ஆழ்வாரின் இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply