
தந்தை ஒருவர் தமது மகளின் கணவரை கொலை செய்த சம்பவம் ஒன்று ஹபரண – சேனாதீரியாகம பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு குறித்த இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பலியானவர் 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் அம்பாறை பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் சேவை செய்த இராணுவ சிப்பாய் என குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்





