தரம் 10 முதல் நுண்ணறிவு பாடம் அறிமுகம் – கல்வி அமைச்சர்

தரம் 10 முதல், செயற்கை நுண்ணறிவை ,ஒரு பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியிலும், இடைநிலைத் துறையிலும், முதன்மைத் துறையில் தொடர்புடைய மாற்றங்களுடன் புதுமைகள் செய்யப்பட வேண்டும்.

“நனோ தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி , இயந்திர கற்றல் போன்ற பாடங்கள் பல்கலைக்கழக பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் நமது குழந்தைகளின் அறிவு ,உலகின் வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி படிக்கும் குழந்தைகளின் அறிவுக்கு சமமாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து சர்வதேச மட்டத்திலான அறிவைப் பெற்று இந்த நாட்டிற்கு வருகை தரும் பிள்ளைகளின் அறிவுக்கு ஏற்ற தொழில்கள் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

“பேராசிரியர்களின் ஒப்புதலுடன், பல்கலைக் கழக அளவில் உயர்கல்வி பாடத்திட்டங்களும், இடைநிலைக் கல்வியும் நவீனப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply