தபால் தினத்தை யொட்டி மஸ்கெலியா நகரில் கரபந்தாட்ட போட்டி!

உலக தபால் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா தபால் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கரப்பந்தாட்ட போட்டி இன்றைய தினம் மஸ்கெலியா பொது விளையாட்டு திடலில் இடம்பெற்றது.

இப் போட்டி தொடரில் மஸ்கெலியா தபாற் கந்தோர்.அணி,இலங்கை இராணுவ அணி,சென் ஜோசப் கல்லூரி அணி,மஸ்கெலியா பிரதேச சபை அணி,மஸ்கெலியா கூட்டுறவு அணி,ஆகிய 5 அணிகள் விளையாடின.

இவற்றுள், இறுதி போட்டிக்கு மஸ்கெலியா தபாற் கந்தோர் அணியும்,சென்.ஜோசப் கல்லூரி அணியும் மோதின 2:0 என்ற புள்ளி கணக்கில் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி அணி வெற்றி பெற்று தபால் கிண்ணத்தை சுவீகரித்தது.

கலந்து கொண்ட அணிகள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.அனைத்து தபால் அலுவலக உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் இனிய தபால் தின வாழ்த்துகள் என மஸ்கெலியா அஞ்சலக அதிபர் திரு.நிஹால் தெரிவித்தார்.

போட்டியின் போது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார.சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர்.எஸ்.பி.பரமேஸ்வரன்.மஸ்கெலிய பிரதேச சபையின் செயலாளர் திரு.ராஜவீரன்.உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இருதியில் வெற்றி பெற்ற அணிக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply