
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 14 பதக்கங்களுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.
கடந்த 5 ம் திகதி தொடக்கம் 9 ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று நிறைவுக்கு வந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்கள் 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள்,
6 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
.
இம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய அதிபர் முஹம்மட் ஜாபிர், பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





