போதை மருந்து வில்லைகளுடன் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் புல்மோட்டை பகுதிக்கு சென்ற நிலையில் 777 போதை மருந்து வில்லைகளுடனும், 60 கிராம் நிறை கொண்ட கேரளாகஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புல்மோட்டை பகுதிக்கு குறித்த தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் கொண்டு செல்லும் போது வழியில் தருமபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து போருந்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply